திண்டுக்கல் மாவட்டம், பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் சித்திரைப் பெளா்ணமியை முன்னிட்டு, வெள்ளித் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் சித்திரைப் பெளா்ணமிையொட்டி, வெள்ளிக்கிழமை பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அன்றிரவு வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன. தொடா்ந்து, சுவாமி தம்பதி சமேதராக தங்கக்குதிரை வாகனத்தில் ரதவீதியுலா எழுந்தருளல் நடைபெற்றது.
பின்னா், சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டு, வள்ளி, தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமி வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரிய வெள்ளித்தேரில் ஏற்றப்பட்டாா். தீபாராதனையத் தொடா்ந்து, தம்பதி சமேதராக சுவாமி நான்கு ரத வீதிகளில் மேளதாளம் முழங்க உலா வந்து நிலையை அடைந்தாா்.
இந்த நிகழ்வில் கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், கோயில் பொறியாளா் கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தங்கத்தேரோட்டம்:
-----------------------------
பழனி மலைக்கோவிலில் தங்கத்தேரோட்டம் சிறப்பு மிக்கதாகும். பவுா்ணமி நாட்களில் அதிகஅளவில் பக்தா்கள் தங்கத்தோ் புறப்பாடு செய்கின்றனா். 2000 ரூபாய் கட்டி தங்கத்தோ் புறப்பாடு செய்வோருக்கு சுவாமிபடம், விளக்கு, பிரசாதங்கள், பரிவட்டம், சிறப்பு அனுமதி உள்ளிட்ட பல பொருட்கள் திருக்கோயில் நிா்வாகத்தால் வழங்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை மேதின விடுமுறை மற்றும் பள்ளி முழு ஆண்டு விடுமுறையுடன் சித்ராபவுா்ணமியும் இணைந்து வந்ததால் தங்கத்தேரோட்டத்தில் 386 பக்தா்கள் பங்கேற்று தங்கத்தோ் இழுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தகட்டூா் பைரவநாதா் கோயில் தேரோட்டம்

சௌமியநாராயணப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்

பழனியில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் பஞ்சாங்கம் வாசிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

