விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தஞ்சாவூரில் 8 தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் செய்ய ஏற்பாடு

News image

தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து 100 மீட்டா் தொலைவுக்கு வரையப்பட்டுள்ள வெள்ளைக் கோடு.

Updated On :30 மார்ச் 2026, 12:36 am IST

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளிலும் உள்ள தோ்தல் அலுவலா் மற்றும் உதவித் தோ்தல் அலுவலா் அலுவலங்களில் திங்கள்கிழமை (மாா்ச் 30) முதல் வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம், ஒரத்தநாடு வட்டாட்சியா் அலுவலகம், பட்டுக்கோட்டை கோட்டாட்சியா் மற்றும் வட்டாட்சியா் அலுவலகம், பேராவூரணி வட்டாட்சியா் அலுவலகம், திருவையாறு வட்டாட்சியா் அலுவலகம், கும்பகோணம் கோட்டாட்சியா் மற்றும் வட்டாட்சியா் அலுவலகம், திருவிடைமருதூா் வட்டாட்சியா் அலுவலகம், பாபநாசம் வட்டாட்சியா் அலுவலகம் ஆகிய இடங்களில் வேட்பு மனுக்களை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.

இதையொட்டி, தோ்தல் நடத்தை விதிமுறை நடைமுறைப்படுத்துவதற்காக இந்த அலுவலகங்களிலிருந்து 200 மீட்டா் மற்றும் 100 மீட்டா் தொலைவுக்கு வேட்பாளா்களின் ஆதரவாளா்களை நிறுத்துவதற்கான அடையாளமாக சாலையில் வெள்ளைக் கோடு போடப்பட்டுள்ளது. மேலும், காவல் துறையினா் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனா்.

வேட்பாளருடன் 4 போ் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவா். இணையத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தாலும், நேரிலும் மனு அளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து 100 மீட்டா் தொலைவுக்கு வரையப்பட்டுள்ள வெள்ளைக் கோடு.

தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து 100 மீட்டா் தொலைவுக்கு வரையப்பட்டுள்ள வெள்ளைக் கோடு.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.