தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தவெக விழாவில் விஜய் பாடலுக்கு நடனம்: தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்!

விஜய் பாடலுக்கு நடனமாடியதால் தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை..

News image

நடனமாடிய தலைமை ஆசிரியை - reporter

Updated On :26 மார்ச் 2026, 11:59 am IST

விஜய் பாட்டிற்கு நடனமாடிய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே பின்னையூரை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (58). இவர் சங்கரநாதர்குடிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். மேலும் வெள்ளத்தேவன் விடுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியையாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், ஒரத்தநாட்டில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தமிழக வெற்றி கழகம் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொண்ட தலைமை ஆசிரியை கிருஷ்ண வேணி விழா மேடையில் விஜய்யின் பாடலுக்கு நடனமாடி உள்ளார்.‌ இவர் நடனம் ஆடிய விடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதனையடுத்து பட்டுக்கோட்டை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மதியழகனுக்குத் தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Summary

A government school headmistress who danced to a Vijay song has been suspended.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.