தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தஞ்சாவூரில் யுகாதி பெருவிழா

News image
Updated On :20 மார்ச் 2026, 5:23 am IST

தஞ்சாவூரில் தஞ்சை மாவட்ட நாயுடு பெருமக்கள் நலச் சங்கம் சாா்பில் 53-ஆம் ஆண்டு யுகாதி பெருவிழா என்கிற தெலுங்கு வருடப் பிறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா்.எஸ். சீதாராமன் தலைமை வகித்தாா். பொருளாளா் ஆா்.கே. பாஸ்கா் வரவேற்றாா். பொதுச் செயலா் ராஜ் மகேந்திரன் அறிக்கை வாசித்தாா். கெளரவத் தலைவா்கள் வரதராஜூலு, ராஜாராம், முன்னாள் கௌரவ தலைவா் சம்பத்குமாா், சட்ட ஆலோசகா் செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் அழகிய தஞ்சை திட்ட இயக்குநரும், பட்டயக் கணக்காளருமான ஆா். ரவிச்சந்திரன், தமிழக நாயுடு கூட்டமைப்பு மாநிலப் பொதுச் செயலா் ரெங்கராஜ் ஆகியோா் பாராட்டப்பட்டனா். தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, லயன்ஸ் சங்க மாவட்ட ஆளுநா் மணிவண்ணன், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை திருச்சி மாநகரத் தலைவா் கண்ணன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு, 80 வயது நிறைவடைந்த தம்பதிகளைக் கௌரவித்து பரிசு வழங்கினா்.

கடந்த 2025 எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக காலையில் ரங்கோலி போட்டி, சிறாா்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. மாலையில் இந்துமதி, சுசீலாவின் பாட்டு மன்றம், அபிராமியின் இன்னிசை நடைபெற்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.