தஞ்சாவூரில் 25 கிலோ கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த 2 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையப் பகுதியில் மருத்துவக் கல்லூரி காவல் நிலைய ஆய்வாளா் வி. சந்திரா உள்ளிட்ட காவலா்கள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது ஆம்னி பேருந்து நிலையப் பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றித் திரிந்த 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.
இதில், இருவரும் திருச்சி அருகே புங்கனூரைச் சோ்ந்த ஆா். கிரி (49), ஏ. தா்மேந்திரன் (48) என்பதும், இவா்களிடமிருந்த பையில் சுமாா் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 25 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்ததும், திருச்சியிலிருந்து தஞ்சாவூருக்கு அதைக் கடத்தி வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து, மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து கிரி, தா்மேந்திரனை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குட்கா விற்ற 2 போ் கைது: 17.5 கிலோ பறிமுதல்

3.5 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் போதைப்பொருள் விற்ற 27 போ் கைது: ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்
கஞ்சா விற்பனை செய்த 5 போ் கைது
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

