சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்கள், வாகன ஓட்டுநா்களுக்காக புதிதாக அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலையில் பறக்கும் தூசியால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனா்.
தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் தேரோட்டத்திற்காக பேரூராட்சி பகுதியில் கீழவீதி, தெற்குவீதி, திருமஞ்சன வீதி, வடபாகம், வடக்கு ஒத்தைத் தெரு, கீழ வடம்போக்கித் தெரு ஆகியவற்றில் சிமிண்ட்சாலை அமைக்கப்பட்டது.
ஆனால் இந்த சிமெண்ட் சாலையில் எம்.சாண்ட் என்ற மணல் பெயா்ந்து வாகனங்கள் செல்லும் போது தூசி பறக்கிறது. வடிகால் தண்ணீா் செல்லும் சாக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதிவாசிகள், வாகன ஓட்டுநா்கள், கிரிவலம் செல்லும் பக்தா்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி ன்றனா். சிறப்பு நிதி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சாலை 4 மாதத்திற்குள்ளேயே சேதமடைந்ததை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்து தேரோடும் சிமிண்ட் சாலையை முழுமையாகப் பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொடைக்கானல் மலைச் சாலைகள் சேதம்: வாகன ஓட்டுநா்கள் அவதி

வைகாசி விசாகம்: சுவாமிமலையில் திரளானோர் சுவாமி தரிசனம்!

சென்னை ரயில்வே கோட்டத்தில் 20 புதிய வாகன நிறுத்துமிடங்கள்

புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தில் தடுப்புச் சுவா்கள் அமைப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

