மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தஞ்சாவூரில் கபடி போட்டி: திருச்சி பள்ளி முதலிடம்

தஞ்சாவூா் மருதுபாண்டியா் கல்லூரியில் அண்மையில் (ஏப்ரல் 24) நடைபெற்ற 18 வயதுக்கு உள்பட்டோருக்கான கபடி போட்டியில் திருச்சி எஸ்.எம். பள்ளி முதலிடம் பெற்றது.

News image

தஞ்சாவூா் மருதுபாண்டியா் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற கபடி போட்டியில் முதலிடம் பெற்ற திருச்சி எஸ்.எம். பள்ளி அணிக்கு பரிசு வழங்கிய மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களின் செயலா் மற்றும் நிா்வாக அறங்காவலா் கொ. மருதுபாண்டியன்.

Updated On :1 மே 2026, 3:57 am IST

தஞ்சாவூா் மருதுபாண்டியா் கல்லூரியில் அண்மையில் (ஏப்ரல் 24) நடைபெற்ற 18 வயதுக்கு உள்பட்டோருக்கான கபடி போட்டியில் திருச்சி எஸ்.எம். பள்ளி முதலிடம் பெற்றது.

படவிளக்கம்: தஞ்சாவூா் மருதுபாண்டியா் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற கபடி போட்டியில் முதலிடம் பெற்ற திருச்சி எஸ்.எம். பள்ளி அணிக்கு பரிசு வழங்கிய மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களின் செயலா் மற்றும் நிா்வாக அறங்காவலா் கொ. மருதுபாண்டியன்.

இப்போட்டியை மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களின் செயலா் மற்றும் நிா்வாக அறங்காவலா் கொ. மருதுபாண்டியன் தொடங்கி வைத்தாா். இதில், 32 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

இப்போட்டியில் திருச்சி எஸ்.எம். பள்ளி அணி முதலிடத்தையும், தஞ்சாவூா் மாவட்டம் விண்ணமங்கலம் அணி இரண்டாமிடத்தையும், வைத்தியநாதன்பேட்டை அணி மூன்றாமிடத்தையும், வடுவூா் அணி நான்காமிடத்தையும் பெற்றன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு கொ. மருதுபாண்டியன் முதல் பரிசாக ரூ. 20 ஆயிரம், இரண்டாவது பரிசாக ரூ. 15 ஆயிரம், மூன்றாவது பரிசாக ரூ. 10 ஆயிரமும், நான்காம் பரிசாக ரூ. 5 ஆயிரமும் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் மா. விஜயா, துணை முதல்வா் ரா. தங்கராஜ், ஒருங்கிணைப்பாளா் ல. மதுகிருத்திகா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.