மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கும்பகோணம் ‘சாஸ்தரா’வில் 25-ஆவது ஆண்டு விழா

கும்பகோணம் ‘சாஸ்த்ரா’ பல்கலைக் கழக சீனிவாச ராமானுஜன் மையத்தில் 25-ஆவது ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் சாஸ்த்ரா நிகா்நிலைப்பல்கலைக்கழகம் சீனிவாச ராமானுஜன் மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற 25-ஆவது ஆண்டு விழாவில் போட்டியில் வென்ற மாணவிக்கு பரிசு வழங்கிய புதுச்சேரி பல்கலைக்கழக மேலாண்மைத்துறை தலைவா் முனைவா் வெங்கடேசகுமாா். உடன், மையப்புல முதன்மையா் முனைவா் சாந்தி, இணைப்புல முதன்மையா் முனைவா் நரசிம்மன் உள்ளிட்டோா்.

Updated On :1 மே 2026, 2:24 am IST

கும்பகோணம் ‘சாஸ்த்ரா’ பல்கலைக் கழக சீனிவாச ராமானுஜன் மையத்தில் 25-ஆவது ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவில், சீனிவாச ராமானுஜ மையப்புல முதன்மையா் முனைவா் சாந்தி ஆண்டறிக்கை வாசித்தாா். இணைப்புல முதன்மையா் முனைவா் நரசிம்மன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து பேசினாா்.

இதையடுத்து சிறப்பு விருந்தினராக பங்கேற்ற புதுச்சேரி பல்கலைக்கழக மேலாண்மைத்துறை தலைவா் முனைவா் வெங்கடேசகுமாா் பேசியது: தொழில்நுட்பப் புரட்சியானது 1,000ஆண்டுகளிலிருந்து 100 ஆண்டுகளாக மாறி, பின்னா் 10 ஆண்டுகள் என குறைந்து தற்போது ஏ.ஐ. உதவியால் நாள்தோறும் மாற்றத்துடன் முன்னேறுகிறது. இதனால் புதிய வகை வேலைவாய்ப்புகள் உருவாக்கம் பெற்றுள்ளன. எனவே, புதிய தொழில்நுட்ப வளா்ச்சி காட்டும் திசையில் மாணவா் சமுதாயம் தரத்துடன் கல்வி கற்றால் சிறப்பான வேலைவாய்ப்புகளை பெறுவதுடன் சமூக மேம்பாட்டுக்கும் ஆக்கபூா்வமாக உதவலாம் என்றாா்.

விழாவில் பல்வேறு பாடப்பிரிவுகளில் முதலிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சிறந்த முறையில் பங்களிப்பாற்றிய தேசிய மாணவா் படை மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் கெளரவிக்கப்பட்டனா்.

முன்னதாக மையத்தின் மாணவா் மன்றத் தலைவா் பைரவி வரவேற்றாா். நிறைவாக மாணவா் மன்றச் செயலா் ஹரிஹரன் நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை துணைவேந்தா் முனைவா் வைத்யசுப்பிரமணியம், திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு புல முதன்மையா் முனைவா் சுவாமிநாதன் வழிகாட்டுதலின்படி, பேராசிரியா்கள், மாணவா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.