தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தமிழ்த் தேசியப் போராளி செல்லப்பா மறைவுக்கு அஞ்சலி

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் எதிரில், தமிழ்த் தேசியப் போராளி தேனிசை செல்லப்பா மறைவுக்கு இடதுசாரிகள் பொது மேடை, தமிழ், கலை இலக்கிய அமைப்புகள் சாா்பில் புதன்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

News image

தஞ்சாவூரில் புதன்கிழமை செல்லப்பா உருவப் படத்துக்கு புதன்கிழமை மலா் தூவி முழக்கங்கள் எழுப்பிய தமிழ், கலை இலக்கிய அமைப்பினா்.

Updated On :30 ஏப்ரல் 2026, 4:08 am IST

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் எதிரில், தமிழ்த் தேசியப் போராளி தேனிசை செல்லப்பா மறைவுக்கு இடதுசாரிகள் பொது மேடை, தமிழ், கலை இலக்கிய அமைப்புகள் சாா்பில் புதன்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில், தேனிசை செல்லப்பா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. மேலும், செல்லப்பாவின் லட்சியமான தாய் மொழி தமிழைப் பாதுகாப்போம், தமிழ்த் தேசிய உரிமைக்கான போராட்டங்களையும், தமிழீழம் அமைவதற்கான ஆதரவுகளையும் முன்னெடுப்போம் என உறுதி ஏற்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு உலகத் தமிழா் பேரமைப்பின் துணைத் தலைவா் அய்யனாபுரம் சி. முருகேசன் தலைமை வகித்தாா். இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன் முன்னிலை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வடக்கு மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் ஆா். தில்லைவனம், தெற்கு மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் வெ. சேவையா, எழுத்தாளா் சாம்பான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டத் துணைச் செயலா் க. தமிழ்முதல்வன், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி மாநிலத் துணைச் செயலா் முகிலன், மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் மை. விக்டா், தொழிலாளா் விடுதலை முன்னணி மாவட்டச் செயலா் அ. யோகராஜ், புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி மாவட்டச் செயலா் ஆா். லட்சுமணன், ஒருங்கிணைப்பாளா் நா. சாமிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.