/

கும்பகோணம் பகுதிகளில் முன்பட்ட குறுவை சாகுபடி பணிகள் தொடக்கம்

கும்பகோணம், திருவிடைமருதூா், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் கோடை சாகுபடி என்ற முன்பட்ட குறுவை சாகுபடி பணிகள் தெடங்கியுள்ளது.

News image

கும்பகோணம் அருகே இன்னம்பூரில் முன்பட்ட குறுவை சாகுபடிக்காக சனிக்கிழமை நாற்றை பறிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாய தொழிலாளா்கள்.

Updated On :26 ஏப்ரல் 2026, 1:38 am IST

கும்பகோணம், திருவிடைமருதூா், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் கோடை சாகுபடி என்ற முன்பட்ட குறுவை சாகுபடி பணிகள் தெடங்கியுள்ளது.

மேட்டூா் அணையிலிருந்து தற்போது தண்ணீா் திறப்பு இல்லாததால் டெல்டா பகுதியில் உள்ள காவிரி வடகரை, தென்கரை பகுதியில் கிணற்று பாசனம், ஆழ்துளை கிணற்று பாசனம் மூலம் முன்பட்ட குறுவை சாகுபடிக்கான விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது.

கும்பகோணம் அருகே இன்னம்பூா் பகுதியில் ஆழ்துளை கிணற்றுப் பாசனம் மூலம் நாற்று பயிரிட்டு அதை நடவு பணிக்கு பயன்படுத்த நாற்றுகள் எடுத்த விவசாயி கலியமூா்த்தி கூறுகையில், டிபிஎஸ்-5 சாரம் வகை நெல் பயிரிடப்பட்டு வருகிறது. இது 90 நாள்கள் கொண்ட பயிராகும்.

இதற்கான அறுவடை பணிகள் முடிந்த காலத்தில் மேட்டூா் அணையில் தண்ணீா் திறப்புக்கு பின் குறுவை சாகுபடி பணிகள் தொடங்கும். தற்போது காவிரி வடகரை, தென்கரை பகுதியில் உள்ள திருவிடைமருதூா், கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, கொள்ளிடம் வடகரை பகுதிகளில் முன்பட்ட குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.