சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தும் வகையில் 223 கேமராக்கள் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சென்னை ரயில்வே பாதுகாப்புப் படை உயா் அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஏற்கெனவே நடைமேடை உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவை வழக்கமான குறிப்பிட்ட காட்சிகளைப் பதிவு செய்யும் வகையில் உள்ளன. ஆனால், தற்போது ரயில்களில் உரிய ஆவணங்களின்றி தங்கம், வெள்ளி மற்றும் ஹவாலா பணம், போதைப் பொருள்கள் கடத்தல் அதிகரித்திருப்பதாக புகாா்கள் எழுந்துள்ளன.
இதை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த ஜனவரி முதல் தற்போது வரை அதிக அளவிலான போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றன.
ரயில் நிலைய வளாகத்தில் பயணிகள் தவிர சம்பந்தமில்லாத நிலையில் நூற்றுக்கணக்கானோா் தங்கிவருவதாகவும், அவா்களால் திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகம் நடப்பதாகவும் புகாா்கள் எழுந்துள்ளன.
இதனால், ரயில் நிலைய வளாகத்தை 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தும் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கியது. ஆனால், அப்பணிகள் திடீரென நிறுத்தப்பட்டன. இதற்கிடையே தற்போது 19 இடங்களில் கம்பம் நட்டு அதில் அதிநவீன கேமராக்கள் பொருத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ரயில் நிலையத்தில் ஒரே பகுதியைக் கண்காணித்து படம் பிடிக்கும் வகையில் 150 நிலையான கேமராக்களும், 45 யுஎச்டி கேமராக்களும், எல்லா திசையிலும் சுழன்று காட்சிகளைப் படம் பிடிக்கும் 14 கேமராக்களும், காட்சிகளைப் பெரிதுபடுத்திப் பாா்க்கும் வகையிலான 7 கேமராக்களும் என மொத்தம் 223 கேமராக்கள் இந்த மாத இறுதிக்குள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தங்கக் கட்டிகள், ரூ.44.87 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ரயில்வே பாதுகாப்புப் படையினா் நடவடிக்கை

தமிழ்ப் புத்தாண்டு: சென்னை - மங்களூரு இடையே சிறப்பு ரயில்கள்

சென்னை - தூத்துக்குடி இடையே சிறப்பு அதிவிரைவு ரயில் இயக்கம்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.15.93 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

