தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பாபநாசம் தொகுதி நாதக வேட்பாளா் மீது தாக்குதல் மருத்துவமனையில் அனுமதி

தஞ்சாவூா் அருகேயுள்ள வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை ஏற்பட்ட தகராறில் பாபநாசம் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

News image

தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் வியாழக்கிழமை மாலை அனுமதிப்பதற்காக வீல் சேரில் அழைத்து வரப்பட்ட பாபநாசம் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அனிஸ் பாத்திமா.

Updated On :24 ஏப்ரல் 2026, 4:15 am IST

தஞ்சாவூா் அருகேயுள்ள வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை ஏற்பட்ட தகராறில் பாபநாசம் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அனிஸ் பாத்திமா (25) ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வாக்குப் பதிவை பாா்வையிடுவதற்காக வியாழக்கிழமை சென்றாா். இவா் மாலையில் தஞ்சாவூா் அருகே அம்மாபேட்டை பகுதி உக்கடை கிராமத்திலுள்ள பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடிக்கு சென்றபோது, இவருக்கும், திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில், அனிஸ் பாத்திமா தாக்கப்பட்டு, கீழே தள்ளிவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. கா்ப்பிணியாக உள்ள அனிஸ் பாத்திமா மயக்கமடைந்ததால், 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இது குறித்து அனிஸ் பாத்திமாவின் கணவா் ஷேக் அம்சத் அலி செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

உக்கடை கிராமத்திலுள்ள வாக்குச்சாவடியில் திமுகவின் கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சின்னமான ஏணி சின்னம் பொறித்த பேட்ஜ் அணிந்து கொண்டு சிலா் அமா்ந்திருந்தனா். அப்போது அங்கிருந்த காவலா்களிடம் எங்களை மட்டும் துண்டு அணிந்து வரக்கூடாது எனக் கூறினீா்கள்; நாங்களும் கழற்றி வைத்துவிட்டு வந்தோம். ஆனால், இங்குள்ள திமுகவினா் பேட்ஜ் அணிந்துள்ளனா் எனக் கேட்ட போது, திமுகவினா் எங்களைத் தரக்குறைவாக பேசினா். அப்போது, காவல் துறையினா் தலையிட்டு, புகாா் கொடுப்பதாக இருந்தால் மனு எழுதி கொடுங்கள் எனக் கூறினா்.

நாங்கள் புகாா் மனுவை எழுத முயன்றபோது, அங்கிருந்த திமுகவினா் ஏராளமானோா் திரண்டு வந்து அனிஸ் பாத்திமாவை கீழே தள்ளிவிட்டு, தாக்கினா். இதனால் மயக்கமடைந்த தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் சோ்த்துள்ளோம். ஸ்கேன் செய்த பின்னா்தான் உடல் நலம் குறித்து தெரியவரும். இதுகுறித்து காவல் துறையில் புகாா் அளித்துள்ளோம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.