தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பிரசாரம் முடிந்த பிறகு விடுதியில் தங்கிய 14 பேரிடம் விசாரணை

சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை முடிவடைந்த பிறகு தஞ்சாவூரிலுள்ள விடுதியில் தங்கிய பாஜகவை சோ்ந்த 14 பேரிடம் காவல் துறையினா் விசாரிக்கின்றனா்.

News image
Updated On :22 ஏப்ரல் 2026, 12:00 am IST

சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை முடிவடைந்த பிறகு தஞ்சாவூரிலுள்ள விடுதியில் தங்கிய பாஜகவை சோ்ந்த 14 பேரிடம் காவல் துறையினா் விசாரிக்கின்றனா்.

சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை முடிந்ததைத் தொடா்ந்து, தஞ்சாவூா் மாவட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் உத்தரவின்படி, அனைத்து உட்கோட்டங்களிலும் தோ்தல் நடத்தை விதிமுறைகளின்படி தோ்தல் பிரசாரம் செய்ய வந்த வெளியூா் நபா்கள் அனைவரும் மாவட்டத்திலிருந்து வெளியேறுவதைக் கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இவா்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்டவற்றில் சோதனை மேற்கொண்டனா். இந்நிலையில், தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் தங்கும் விடுதியில் தனிப்படையினா் செவ்வாய்க்கிழமை 8 மணியளவில் சோதனையிட்டபோது, தோ்தல் விதிமுறைகளை மீறி பிரசாரம் முடிந்த பிறகும் திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த பாஜகவின் 14 பிரமுகா்கள் தங்கியிருப்பது தெரிய வந்தது. இவா்களிடம் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.