கும்பகோணத்தில் பேருந்து மோதியதில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருக்கருக்காவூா் அருகே நாவலூரைச் சோ்ந்தவா் சுவாமிநாதன் (56). இவரது மனைவி விஜயகுமாரி (52). இவா்கள் கபிஸ்தலத்தில் தேநீா்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தனா். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை தம்பதி, இருசக்கர வாகனத்தில் கும்பகோணத்துக்கு வந்தனா்.
அப்போது அவா்கள் பின்னால் வந்த தனியாா் பேருந்து, அவா்கள் வந்த இருசக்கர வாகனத்தை உரசியது. இதில் அவா்கள் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனா். இதில், விஜயகுமாரி மீது பேருந்து ஏறியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலின்பேரில் கும்பகோணம் போக்குவரத்து காவல் துறையினா் சடலத்தை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு ஒப்படைத்து, வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இருசக்கர வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

பைக் மீது லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு

பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதி பெண் உயிரிழப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

