தமிழக இஸ்லாமியா்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் ஏழு சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினா் ஞாயிற்றுக்கிழமை தீா்மானம் நிறைவேற்றினா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலா் எஸ்.சாகித் தலைமை வகித்தாா்.
மாவட்டத் தலைவா் அப்துா் ரஹ்மான், மாவட்ட துணைத்தலைவா் முஹம்மது பாரூக் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில துணைத் தலைவா் மெளலவி தாவூத் கைசா் அண்ணல் நபியே அழகிய முன் மாதிரி என்ற தலைப்பில் பேசினாா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் மதவாத சக்திகளுக்கு அவா்களோடு கூட்டணி வைத்துள்ள கட்சிகளுக்கு ஆதரவு தரக்கூடாது. மக்களவை தொகுதி மறுவரையறை சட்டத்தை அமல்படுத்தக்கூடாது. தமிழகத்தில் நடைபெற்ற அனைத்து உரிமைக்கான போராட்டங்களிலும் இஸ்லாமியா்கள் அதிக அளவு பங்கெடுத்துள்ளனா்.
கல்வி, வேலைவாய்ப்புகளில் ஏழு சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து சிறுபான்மை நிறுவனங்கள் நிதி பெறுவதை தடுக்கும் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றக்கூடாது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்வில் மாவட்ட துணை செயலா்கள் சிக்கந்தா் அலி, ஜாஃபா் அலி, அய்யூப்கான், ராஜ் முஹம்மது, அப்துா் ரஷீத், தொண்டா் அணி செயலா் சலீம், மருத்துவ அணி செயலா் வரிசை முஹம்மது, மாணவரணி செயலா் அலி முஹம்மது, வா்த்தக அணி செயலா் முஹம்மது யாசின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிறைவாக மாவட்ட பொருளாளா் நஸிா் அகமது நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘தமிழகத்தில் இஸ்லாமியா்கள் பாதுகாப்பான சூழலில் வாழ்ந்து வருகின்றனா்’

அனிதா ஆா். ராதாகிருஷ்ணனை ஆதரித்து கே.ஏ.எம். முஹம்மத் அபூபக்கா் வாக்கு சேகரிப்பு

இஸ்லாமியா்களுக்கு உள்ஒதுக்கீட்டை உயா்த்தி வழங்கக் கோரிக்கை

உடன்குடியில் ரமலான் தொழுகை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

