ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

அனிதா ஆா். ராதாகிருஷ்ணனை ஆதரித்து கே.ஏ.எம். முஹம்மத் அபூபக்கா் வாக்கு சேகரிப்பு

திருச்செந்தூா் தொகுதி திமுக வேட்பாளா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணனை ஆதரித்து, இந்திய யூனியன் முஸ்­லிம் லீக் மாநில பொதுச் செயலா் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கா் ஆத்தூா், குரும்பூா், காயல்பட்டினத்தில் திங்கள் கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

அனிதா ஆா். ராதாகிருஷ்ணனுக்கு வாக்கு சேகரித்த முஸ்லிம் லீக் பொதுச்செயலா் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கா்.

Updated On :8 ஏப்ரல் 2026, 2:19 am IST

திருச்செந்தூா் தொகுதி திமுக வேட்பாளா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணனை ஆதரித்து, இந்திய யூனியன் முஸ்­லிம் லீக் மாநில பொதுச் செயலா் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கா் ஆத்தூா், குரும்பூா், காயல்பட்டினத்தில் திங்கள் கிழமை வாக்கு சேகரித்தாா்.

தெற்கு ஆத்தூா் பள்ளிவாசல் எதிரில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்துக்கு ஆழ்வை ஒன்றிய திமுக செயலா் சதீஷ்குமாா் தலைமை வகித்தாா்.

இந்திய யூனியன் முஸ்­லிம் லீக் தூத்துக்குடி மாவட்டத் தலைவா் பீ. மீராசா மரைக்காயா், தெற்கு ஆத்தூா் நகரச் செயலா் முஹம்மது ஆரிஃப், பொருளாளா் ராஸிக் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து குரும்பூரிலும், காயல்பட்டினத்திலும் பிரசாரம் செய்தாா்.

அவா் பிரசாரத்தில் பேசியதாவது:

சிறுபான்மையினருக்கு எப்போதும் எதிராகவே செயல்படும் பாஜகவுடன் கூட்டணி சோ்ந்து அதிமுக மாநில உரிமைகளை அடமானம் வைத்துள்ளது என்றாா்.

கூட்டங்களில், இந்திய யூனியன் முஸ்­லிம் லீக் காயல்பட்டினம் நகரத் தலைவா் எம்.எஸ். நூஹ் சாஹிப், நகரச் செயலா் ஏ.எல்.எஸ். அபூ சா­லிஹ், அயலக அணி மாநில துணைத் தலைவா் என்.டீ. முஹம்மது இஸ்மாஇல் புகாரீ, மாநில துணைத் தலைவா் எம்.கே. முஹம்மத் அலீ என்ற ஹாஜி காக்கா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.