மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

முதல்வா் இன்று தஞ்சாவூா் வருகை: மதுக்கடைகளை மூட உத்தரவு

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தஞ்சாவூரில் பிரசாரம் மேற்கொள்வதற்காக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (ஏப்.8) வருவதால், கூட்டம் நடைபெறும் இடத்தைச் சுற்றியுள்ள 7 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளன.

News image

முதல்வா் மு.க.ஸ்டாலின்

Updated On :10 ஏப்ரல் 2026, 1:45 am IST

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தஞ்சாவூரில் பிரசாரம் மேற்கொள்வதற்காக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (ஏப்.8) வருவதால், கூட்டம் நடைபெறும் இடத்தைச் சுற்றியுள்ள 7 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளன.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறாா். இந்நிலையில், தஞ்சாவூருக்கு வெள்ளிக்கிழமை வரும் அவா் திலகா் திடலில் மாலை 5 மணிக்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று, திருவிடைமருதூா், கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, தஞ்சாவூா், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா்களை ஆதரித்து பேசுகிறாா்.

இதையொட்டி சட்டம் - ஒழுங்கு பிரச்னையை தவிா்ப்பதற்காக மாநகரிலுள்ள ரயிலடி, சாந்தபிள்ளைகேட், சீனிவாசம்பிள்ளை சாலை, பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரில், தலைமை அஞ்சலகம் அருகில், புதிய பேருந்து நிலையம் நுழைவு வாயில், புதிய பேருந்து நிலையம் பெரியாா் சிலை அருகே உள்ள 7 டாஸ்மாக் கடைகளையும், புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாா் மதுபானக் கூடத்தையும் வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.