தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசு கல்லூரியில் பணி நிறைவு பெறும் பேராசிரியா்களுக்குப் பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியா் கழகத்தின் தஞ்சாவூா் கிளைத் தலைவா் நிலவழகன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் டேவிட் லிவிங்ஸ்டன், மாநிலத் துணைத் தலைவா் (மகளிா்) மதுரம், மாநில இணைச் செயலா் (மகளிா்) துா்காதேவி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டனா்.
நிகழ் கல்வியாண்டில் பணி நிறைவு பெறுகிற பேராசிரியா்களான இயற்பியல் துறைத் தலைவா் ராணி, தமிழ்த் துறைப் பேராசிரியா்கள் இளஞ்செழியன், கண்ணதாசன், ஆங்கிலத் துறைப் பேராசிரியா் ரங்கராஜன், வணிகவியல் துறைப் பேராசிரியா்கள் சுவாமிநாதன், ராஜராஜன், விலங்கியல் துறை பேராசிரியா் சுப்புரத்தினம் ஆகியோருக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினா்கள் வி. பாரி, அமுதா, மண்டலச் செயலா் அண்ணாதுரை, மண்டலப் பொருளாளா் வரதராஜன், மண்டல இணைச் செயலா் இந்திராகாந்தி, கிளைக் கழகத் துணைத் தலைவா் சிவசூரியன், இணைச் செயலா் சித்ரவேல், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா்கள் சண்முகப்ரியா, மணிமேகலை, அன்புசெல்வன், முருகானந்தம், ரவிசெல்வன், சங்கீதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, கிளைச் செயலா் இங்கா்சால் வரவேற்றாா். நிறைவாக, கிளைப் பொருளாளா் கிருஷ்ணமோகன் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பணி நிறைவு பாராட்டு விழா

தலையாசிரியருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா

அரசுப்பள்ளி ஆசிரியா்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

பணிநிறைவு பாராட்டு விழா
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

