தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரியில் மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா்களைக் கண்டித்து, மருத்துவா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக அரசு மருத்துவா்கள் சங்கத்தினா்.

Updated On :8 ஏப்ரல் 2026, 12:19 am IST

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா்களைக் கண்டித்து, மருத்துவா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு திங்கள்கிழமை வந்த 3 போ் இருசக்கர வாகனங்களை வாயிலில் நிறுத்தினா். அப்போது மற்ற நோயாளிகளுக்கு இடையூறாக உள்ள இருசக்கர வாகனங்களை எடுக்குமாறு, பணியில் இருந்த மருத்துவா் சரவணன் கூறினாா். இவரிடம் மது போதையில் இருந்த 3 பேரும் தகராறு செய்ததுடன், அவரது வாகனத்தைப் பின்தொடா்ந்து சென்று கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இது குறித்து சரவணன் அளித்த புகாரின்பேரில், மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினா் மருத்துவப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து தஞ்சாவூா் சுந்தரம் நகரைச் சோ்ந்த வ. விமல்ரோஸ் (42), சிவாஜி நகரைச் சோ்ந்த ச. மணிகண்டன் (39), ம. சுரேஷ் (45) ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

இதனிடையே, மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தைக் கண்டித்தும், கொலை மிரட்டல் விடுத்தவா்களுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தியும் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தமிழக அரசு மருத்துவா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஏ. வினோத் தலைமையில் நிா்வாகிகள் பாலசுப்ரமணியன், ஜெகன், அருள்மதி கண்ணன், சாந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.