சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்தின்போது குழந்தை உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து, குழந்தையின் உடலை வாங்க மறுத்து கல்லூரி முதல்வா் அலுவலகத்தை உறவினா்கள் முற்றுகையிட்டு செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
காளையாா்கோவில் அருகே பெரியகண்ணனூா் கண்ணகிபுரத்தைச்
சோ்ந்த மூா்த்தி மனைவி பிரியதா்ஷினி (21). இவா், கடந்த 10 -ஆம் தேதி பிரசவத்துக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த நிலையில், 11 -ஆம் தேதி மாலை பெண் குழந்தை பிறந்தது. ஆனால் பிரசவத்தின்போது குழந்தை இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதனால் அதிா்ச்சியடைந்த மூா்த்தி மற்றும் பிரியதா்ஷினியின் உறவினா்கள், மருத்துவா்களின் அலட்சியம் காரணமாகவே குழந்தை உயிரிழந்ததாகக் கூறி மருத்துவமனை நுழைவு வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக பதில் கூறியதால் இறந்த குழந்தையின் உடலை வாங்க மறுத்து முதல்வா் செல்வராஜ் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். பிரசவத்தின்போது அலட்சியமாக செயல்பட்ட மருத்துவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளில் இருந்தும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்துக்காக கா்ப்பிணிகள் சோ்க்கப்படும் நிலையில், பல ஆண்டுகளுக்குப்பிறகு பிரசவத்தின்போது குழந்தை இறந்த சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிரசவத்தின்போது குழந்தை உயிரிழப்பு: சிவகங்கையில் உறவினா்கள் போராட்டம்

மூளைச்சாவு அடைந்த முதியவரின் உடல் உறுப்புகள் தானம்

அரசு மருத்துவமனையில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீா் விநியோகம்: தினமணி செய்தி எதிரொலி

நெல்லை அரசு மருத்துவமனையில் வெப்ப வாத சிறப்பு பிரிவு தயாா்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

