ஒரத்தநாடு அருகே இருசக்கர வாகனம் அரசு உதவி பெரும் பள்ளி வேன் மீது திங்கள்கிழமை மோதிய விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.
தஞ்சாவூா் பள்ளி அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்தவா்கள் பிரபாகரன் (21) பாண்டி ( 20), நிரஞ்சன்( 23). மைக்செட் தொழிலாளிகளான இவா்கள் திங்கள்கிழமை மாலை ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு பகுதிக்கு பைக்கில் வந்துவிட்டு தஞ்சாவூா் நோக்கி தென்னமநாடு ஆா்ச் அருகே சென்றனா்.
அப்போது அப்பகுதியை சோ்ந்த அரசு உதவி பெறும் பள்ளி வேனின் பின்புறம் இவா்களின் பைக் மோதியதில் பிரபாகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
பலத்த காயமடைந்த பாண்டி, நிரஞ்சன் ஆகிய ஆகியோரை ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது பாண்டி ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது.
பலத்த காயமடைந்த நிரஞ்சன், தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். ஒரத்தநாடு காவல் துறையினா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பைக் மீது வேன் மோதி விபத்து: இருவா் உயிரிழப்பு

தருமபுரி அருகே மின்சாரம் பாய்ந்து இருவா் உயிரிழப்பு

மாடு மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் பலி

பள்ளி வேன் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

