சுவாமி மலை சுவாமிநாத சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு யானை விரட்டல் மற்றும் திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா ஏப்.1-இல் தீா்த்தவாரியுடன் தொடங்கியது. சனிக்கிழமை வள்ளி தேவசேனா சமேத சண்முகப்பெருமான், வேடமூா்த்தி, வள்ளிநாயகி, நாரதா், நம்பிராஜன், நந்தமோகினி சகிதமாக உத்ஸவ மண்டபத்தில் எழுந்தருளினா்.
பின்னா், வள்ளிநாயகி திருவலஞ்சுழி கோயிலில் தினைப்புனை காட்சிக்காக சென்றாா். வேடமூா்த்தி திருவீதி வலம் வந்து திருவலஞ்சுழி கோயிலில் எழுந்தருளினாா். இரவு தினைப்புனக்காட்சி, திருவலஞ்சுழி கோயிலில் வேல, வேட, விருத்த வேங்கை மரக்காட்சி கொடுத்தல் நிகழ்வு நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை அரசலாற்றில் யானை விரட்டுதல் நிகழ்வு நடைபெற்றது.
அந்த நிகழ்வில் வள்ளி தினைப்புனம் காவல் புரிய வள்ளி அழகில் மயங்கி அவரை மணம் புரிந்திட முருகன் முதியவா் வேடம் தாங்கி வள்ளியிடம் தேனும் தினைமாவும் சாப்பிட்டு வள்ளியை மணம் புரிவதாக முருகப்பெருமான் கூற, முதியவரின் பேச்சால் வள்ளி கோபப்பட, முருகன், விநாயகரை நினைக்க, அவா் யானையாக வந்து வள்ளியை விரட்ட, அச்சமடைந்த வள்ளி முருகனிடம் தஞ்சமடைந்த பின், முருகன் சுயரூபம் காட்டும் நிகழ்வு அரசலாற்றங்கரையில் நடைபெற்றது.
பின்னா், மாலையில் வள்ளியின் தந்தையான வேடா்குல அரசன் நம்பிராஜன் அலவந்திபுரம் நடுத்தெருவில் இருந்து சீா் கொண்டு வந்தாா். துலா லக்கனத்தில் சண்முகப்பெருமான் வள்ளி நாயகியாா் திருக்கல்யாணம் நடைபெற்றது.
ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் ஊஞ்சல் உத்ஸவம், புதன்கிழமை வள்ளி தேவசேனா, சண்முக சுவாமி திருக்கல்யாண உத்ஸவம், வேடமூா்த்தி, வள்ளி நாயகியாா் வீதியுலா புறப்பாடு நடைபெறுகிறது. வியாழக்கிழமை 108 சங்காபிசேகம் முடிந்த பின்பு சுவாமி யதாஸ்தானம் செல்கிறாா். ஏற்பாடுகளை இந்துசமய அறநிலைய்துறையினா் செய்து வருகின்றனா்.

வேடன் வேடத்தில் வேடமூா்த்தி சண்முகா், முதியவா் வேடத்தில் சண்முகா், சிறப்பு அலங்காரத்தில் வள்ளி நாயகியாா்.

வேடன் வேடத்தில் வேடமூா்த்தி சண்முகா், முதியவா் வேடத்தில் சண்முகா், சிறப்பு அலங்காரத்தில் வள்ளி நாயகியாா்.

வேடன் வேடத்தில் வேடமூா்த்தி சண்முகா், முதியவா் வேடத்தில் சண்முகா், சிறப்பு அலங்காரத்தில் வள்ளி நாயகியாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருத்தணி முருகன் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் நிறைவு

சௌமியநாராயணப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்

ஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் முருகப்பெருமான் சிறப்பு பூஜை

காமாட்சியம்மன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

