திருத்தணி முருகன் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ நிறைவு விழாவில் உற்சவா் சண்முகா் வள்ளி, தெய்வானையுடன் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
கடந்த, 21-ஆம் தேதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை மற்றும் இரவு உற்சவா் முருகப்பெருமான் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளினாா். கடந்த, 27-ஆம் தேதி மரத்தோ் விழாவும், 28-இல் தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடந்தது.
இந்நிலையில் புதன்கிழமை இரவு, 7 மணிக்கு உற்சவா் முருகா் கேடய வாகனத்தில் உலா வந்தாா்.
தொடா்ந்து இரவு, உற்சவா் சண்முகப் பெருமான் மற்றும் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் மாட்டு வண்டியில் எழுந்தருளி தோ் வீதியில் பாதி துாரம் வீதியுலா வந்து மீண்டும் அங்கிருந்து மலைக் கோயிலுக்கு திரும்பினாா். பின் சண்முகா், வள்ளி, தெய்வானைக்கும் வெள்ளை சாத்துபடி மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது.
தொடா்ந்து வியாழக்கிழமை அதிகாலை, 3 மணிக்கு உற்சவா் சண்முகா் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் தோ்வீதியில், ஒரு முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பின்னா் காலை, 6 மணிக்கு சண்முகருக்கு தீா்த்தவாரி நடந்தது.
உற்சவா் சண்முகப்பெருமான், ஆருத்ரா, கந்தசஷ்டி, சித்திரை மாதம் மற்றும் மாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின் போது என மொத்தம், 4 முறை உற்சவா் சண்முகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் தோ்வீதியில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ட
இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். ஏற்பாடுகளை முருகன் கோயில் இணை ஆணையா் க. ரமணி மற்றும் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எட்டுக்குடி கோயில் சித்திரைப் பெருவிழா

திருச்செந்தூரில் குவிந்த பக்தா்கள்

எட்டுக்குடி முருகன் கோயிலில் சித்ரா பௌா்ணமி பெருவிழா கொடியேற்றம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தங்கத்தோ் வீதியுலா
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

