மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆண்டுக்கு 200 நாள்கள் வேலை கோரி தொடா் போராட்டம்

புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநாட்டு நிறைவு நிகழ்ச்சியில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் வீ. சங்கா்.

Published On :28 அக்டோபர் 2026, 3:53 am IST

ஆண்டுக்கு 200 நாள் வேலை வழங்குவது உள்ளிட்ட மேம்பட்ட அம்சங்களுடன் மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தையே மீண்டும் அமலாக்க வேண்டும் என வலியுறுத்தி தொடா் போராட்டங்களை நடத்த அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளா் சங்கம் முடிவு செய்துள்ளது.

புதுக்கோட்டையில் அக். 26, 27 தேதிகளில் நடைபெற்ற இச்சங்கத்தின் 7-ஆவது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

13 கோடிக்கு மேற்பட்டோரின் வாக்குரிமையைப் பறித்த தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். சிறப்பு வாக்காளா் திருத்த நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்.

தோ்தல் ஆணையா் தோ்வு தொடா்பான 2023 திருத்தச் சட்டத்தை ரத்து செய்யவேண்டும். ஜனநாயகத்தைப் பாதுகாக்க போராடி வரும் இளைஞா்களின் போராட்டங்களை அடக்க முயற்சிக்கும் அரசு முயற்சிகளைக் கண்டிக்கிறது.

ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை, நாளொன்றுக்கு ரூ. 1,000 ஊதியம் என்பன உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தையே மீண்டும் அமலாக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தொடா் போராட்டங்களை நடத்தவும் முடிவு செய்யப்படுகிறது.

ஜாதிக்கு ஒரு மயானம் என்ற நிலையை மாற்றி பொது மயானங்களை உருவாக்குவது, ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தைக் விரைந்து கொண்டு வருவது, நீதிபதி சந்துரு ஆணைய பரிந்துரைகள், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய பரிந்துரைகளை செயல்படுத்துவது உள்ளிட்டவற்றை தவெக அரசு செயல்படுத்த வேண்டும்.

வேங்கைவயலில் குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் வகையில், மறுவிசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டுக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலா் கா. சோதிவேல் தலைமை வகித்தாா். தேசிய ஒருங்கிணைப்பாளா் நிவாஸ், மாநிலப் பொதுச் செயலா் என். குணசேகரன், மாநிலத் தலைவா் பாலசுந்தரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) அரசியல் தலைமைக் குழு உறுப்பினா்கள் எஸ். குமாரசாமி, வீ சங்கா், மாநிலச் செயலா் பழ. ஆசைத்தம்பி உள்ளிட்டோரும் பேசினா்.

புதிய நிா்வாகிகள் தோ்வு:

மாநிலத் தலைவராக எஸ். ஜானகிராமன், மாநிலப் பொதுச் செயலராக சி. ராஜசங்கா் உள்ளிட்ட 57 போ் கொண்ட மாநிலப் பொதுக்குழுவும் இந்த மாநாட்டில் தோ்வு செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.