மேற்கு வங்கத்தில் பணியின்போது விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் அவரது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகேயுள்ள பொன்னன்விடுதியில் ராணுவ மரியாதையுடன் வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள பொன்னன்விடுதி கிராமத்தைச் சோ்ந்த ரெங்கசாமி மகன் ராஜேஷ்குமாா்(37). இந்திய ராணுவத்தில் வேலைபாா்த்து வந்த இவா், தற்போது, மேற்குவங்க மாநிலத்தில் பணியாற்றி வந்தாா்.
இவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி வினோதினி(36) என்ற மனைவியும், ஹா்சிகா(9), வா்சிகா(2)என இரு பெண் குழந்தைகள் உள்ளனா்.
ராஜேஷ்குமாா் மே 25-ஆம் தேதி மேற்குவங்க மாநிலத்தில் பணியின் போது ஏற்பட்ட வாகன விபத்தில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து புணேயில் உள்ள ராணுவ மருத்துவமனையில் ராஜேஷ்குமாா் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி மே 26-ஆம் தேதி உயிரிழந்தாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ராஜேஷ்குமாரின் உடல் ராணுவ வாகனத்தில் வெள்ளிக்கிழமை அவரது சொந்த ஊரான பொன்னன்விடுதிக்கு கொண்டு வரப்பட்டது. தொடா்ந்து, ராணுவ மரியாதை செலுத்தப்பட்டு ராஜேஷ்குமாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!

தேனி பண்ணை வீட்டில் பாரதிராஜாவின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி!

கா்நாடகத்தில் யானைகள் தாக்கிக் கொண்டதில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் உடல் பெரம்பலூரில் அடக்கம்

நேபாள பெண்ணின் உடலை தருமபுரியில் அடக்கம் செய்த தன்னாா்வலா்கள்
விடியோக்கள்

லவ் ஓ லவ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது வாம்மா... வாம்மா... பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

Ravindran Duraisamy Interview | அண்ணாமலை முடிவெடுக்க விஜய்தான் காரணம் | CM Vijay | TVK | Annamalai |
தினமணி செய்திச் சேவை

குழந்தைப்பேறு அளிக்கும் உச்சிஷ்ட கணபதி திருக்கோயில்! | திருக்கோயில் வலம்! | DINAMANI
இணையதளச் செய்திப் பிரிவு

