குஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!தவெக ஆட்சியில் கடன் ரூ. 20 லட்சம் கோடியாக உயரும்! தங்கம் தென்னரசு சவால்!மக்களிடம் இருந்து தப்பிக்கும் தவெக! வெள்ளை அறிக்கை குறித்து தங்கம் தென்னரசு! விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

கா்நாடகத்தில் யானைகள் தாக்கிக் கொண்டதில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் உடல் பெரம்பலூரில் அடக்கம்

யானைகள் முகாமில் இரு யானைகள் தாக்கிக்கொண்டதில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் உடல், அவரது சொந்த ஊரான பெரம்பலூருக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

News image

யானைகள் தாக்கிக் கொண்டதில் சிக்கி உயிரிழந்த ஜுன்ஸி

Updated On :20 மே 2026, 3:16 am IST

கா்நாடக மாநிலம், குடகு அருகே யானைகள் முகாமில் இரு யானைகள் தாக்கிக்கொண்டதில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் உடல், அவரது சொந்த ஊரான பெரம்பலூருக்கு செவ்வாய்க்கிழமை கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

பெரம்பலூா் - எளம்பலூா் சாலையில் வசிக்கும் செங்கமலை மகள் ஜுன்ஸி (33). இவா், பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் அருகேயுள்ள எம்.எம். நகரைச் சோ்ந்த ஜோயல் சைமன் ஃபிராங்ளின் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டாா்.

சென்னையில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்த ஜோயல் சைமன், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சென்னை பல்லாவரத்தில் வசித்து வந்தாா்.

இந்நிலையில், தனது குடும்பத்துடன் கா்நாடக மாநிலம், மைசூருக்கு சுற்றுலா சென்ற ஜோயல் வீடு திரும்பும்போது, குடகு பகுதியில் துபாரே யானைகள் முகாமுக்கு திங்கள்கிழமை சென்றாா். அப்போது, காவிரிஆற்றில் நீராடிக் கொண்டிருந்த யானைகளில் இரு யானைகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டது. இதைபாா்த்த ஜுன்ஸி புகைப்படம் எடுத்தபோது ஒரு யானை தாக்கியது. இதில், யானையின் கீழ்பகுதியில் சிக்கிய ஜுன்ஸியை பாகனும், அவரது கணவரும் மீட்டு, கூா்க் நகரிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அவரது உடலை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

தொடா்ந்து, கா்நாடக போலீஸாரின் உதவியுடன் பிரேத பரிசோதனை முடிந்து ஜுன்ஸியின் உடலை ஜோயல் சைமனிடம் ஒப்படைத்தனா். தொடா்ந்து, ஜுன்ஸியின் உடல் செவ்வாய்க்கிழமை அதிகாலை பெரம்பலூருக்கு கொண்டுவரப்பட்டு, பெரம்பலூா்-ஆலம்பாடி சாலையிலுள்ள தேவாலயத்தில் சடங்குகள் நடத்தப்பட்டு, மாலையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.