அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துள்ளதையடுத்து, விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து அதிமுகவில் இபிஎஸ் அணி, எஸ்.பி. வேலுமணி அணி என இரண்டாகப் பிரிந்தது. பின்னர் இரு அணியும் இணைந்த நிலையில் எஸ்.பி. வேலுமணி தரப்பில் இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தனது முடிவை நேற்று(ஜூன் 16) அறிவித்தார்.
விராலிமலை தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்வதாக சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரைச் சந்தித்து சி. விஜயபாஸ்கர் தனது ராஜிநாமா கடிதத்தை வழங்கினார்.
விஜயபாஸ்கரின் ராஜிநாமா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் அறிவித்தார். விஜயபாஸ்கர் தவெகவில் இணையவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அதிமுக எம்எல்ஏக்களாக இருந்த மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்தியபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) தங்கள் பதவியை ராஜிநாமா செய்தனர்.
முதல்வர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், பெரம்பூர் தொகுதியை தக்கவைத்துக்கொண்டு, திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ததால் அந்த தொகுதியும் காலியானதாக உள்ளது.
இதன் மூலம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இந்த 6 தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
Viralimalai constituency declared vacant, By-elections for 6 constituencies in tamilnadu
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விராலிமலை எம்எல்ஏ சி. விஜயபாஸ்கா் ராஜிநாமா: புதுகையில் அதிமுகவினா் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்
அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!

அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அறிவிப்பு! 5 இடங்களுக்கு விரைவில் இடைத்தேர்தல்?
அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
விடியோக்கள்

லவ் ஓ லவ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது வாம்மா... வாம்மா... பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

Ravindran Duraisamy Interview | அண்ணாமலை முடிவெடுக்க விஜய்தான் காரணம் | CM Vijay | TVK | Annamalai |
தினமணி செய்திச் சேவை

குழந்தைப்பேறு அளிக்கும் உச்சிஷ்ட கணபதி திருக்கோயில்! | திருக்கோயில் வலம்! | DINAMANI
இணையதளச் செய்திப் பிரிவு

