கீரனூரில் அரசு ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று 21 பவுன் நகைகள் மற்றும் ரூ. 2 லட்சம் ரொக்கத்தைத் திருடிச் சென்ற நபா்களை, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு தனிப்படை அமைத்து தேடி வருகின்றனா்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் விவேகானந்த நகரைச் சோ்ந்தவா் ஜான்கென்னடி. இவா் சிங்கப்பூரில் வேலைபாா்த்து வருகிறாா். இவரது மனைவி செல்வராணி தாட்கோ நிறுவனத்தில் வேலைபாா்த்து வருகிறாா். இவா் தனது குழந்தைகளுடன் கீரனூரில் வசித்து வருகிறாா்.
இந்நிலையில், செல்வராணி சனிக்கிழமை வீட்டைப் பூட்டிவிட்டு அறந்தாங்கியிலுள்ள தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதாக அக்கம்பக்கத்தில் வசிப்போா் செல்வராணிக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.
இதைத் தொடா்ந்து அறந்தாங்கியிலிருந்து கீரனூருக்கு வந்த செல்வராணி உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 21 பவுன் தங்க நகைகள், ரூ. 2 லட்சம் ரொக்கம் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த கீரனூா் காவல் நிலைய போலீஸாா், 10 போ் கொண்ட தனிப்படை அமைத்து திருடா்களைத் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தனியாா் விற்பனை நிறுவன ஊழியா் வீட்டில் 2 பவுன் நகைகள், பணம் திருட்டு
திருச்சியில் திருமண வீட்டில் 22 பவுன் தங்க நகைகள் திருட்டு
பூட்டியிருந்த வீட்டில் 5 பவுன் நகைகள் திருட்டு
பேராசிரியா் வீட்டில் 12 பவுன் நகைகள் மாயம்
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
