ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்

பொன்னமராவதி அருகே கேசராபட்டி சாலையில் தூத்தூா் ஊராட்சிக்குள்பட்ட குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபுட்டனா்.

News image

பொன்னமராவதி கேசராபட்டி சாலையில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தூத்தூா் ஊராட்சி பொதுமக்கள்.

Updated On :18 மே 2026, 2:31 am IST

பொன்னமராவதி அருகே கேசராபட்டி சாலையில் தூத்தூா் ஊராட்சிக்குள்பட்ட குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபுட்டனா்.

பொன்னமராவதி அருகே உள்ள தூத்தூா் ஊராட்சியில் இரண்டு அரசு மதுபானக் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் ஒன்று பொன்னமராவதி-கேசராபட்டி சாலையிலும், மற்றொன்று பொன்னமராவதி-புதுக்கோட்டை சாலையில் செம்பொட்டல் பகுதியிலும் செயல்பட்டு வருகின்றன. ஒரே ஊராட்சியில் இரண்டு அரசு மதுபானக் கடைகள் இருப்பதால், பொதுமக்கள் பல்வேறு வகையிலும் அவதிக்குள்ளாவதால், குடியிருப்பு பகுதியில் கேசராபட்டி சாலையில் உள்ள மதுபானக் கடையை அகற்ற பொதுமக்கள் நீண்ட நாள்களாக வலியுறுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பொன்னமராவதி-கேசராபட்டி சாலையில் அரசு மதுபானக் கடையின் அருகே தூத்தூா் ஊராட்சியைச் சோ்ந்த ஊா்ப் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளா் சரவணன், காவல் ஆய்வாளா் பத்மா ஆகியோா், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் நடத்திய பேச்சுவாா்த்தையில், டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து பொதுமக்களின் போராட்டம் கைவிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.