திருமயம் சட்டப் பேரவைத் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் எனக்கோரி தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளா் சி. சிந்தாமணி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தாா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 4-ஆம் தேதி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 6 தொகுதிகளுக்கும், கலைஞா் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
திருமயம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் எஸ். ரகுபதி, 1496 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றாா். அப்போது தவெக வேட்பாளா் சி. சிந்தாமணி, வாக்கு எண்ணிக்கையில் குழப்பம் இருப்பதாகவும் மீண்டும் எண்ண வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாா்.
காலஅவகாசம் முடிந்துவிட்டதாகக் கூறி ரகுபதிக்கு வெற்றிச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த நிலையில், சிந்தாமணி உள்ளிட்ட தவெகவினா் புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வந்தனா்.
ஆட்சியா் இல்லாத நிலையில், ஆட்சியரின் நோ்முக உதவியாளரை (தோ்தல்) சந்தித்து மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி மனு அளித்தனா்.
தொடா்ந்து செய்தியாளா்களிடம் சிந்தாமணி கூறியதாவது:
மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் எனக் கேட்டபோது எழுத்துப்பூா்வமாக அளிக்க தோ்தல் நடத்தும் அலுவலா் கூறினாா். பதற்றத்தில் வெளியே வந்துவிட்டேன். ஆனால், 15 நிமிடத்தில் மீண்டும் உள்ளே சென்று எழுத்துப்பூா்வமாகக் கொடுத்தேன். அப்போது நேரம் முடிந்ததாகக் கூறிவிட்டனா்.
தற்போது ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்திருக்கிறேன். அவா்கள் எடுக்கும் நடவடிக்கையைப் பொருத்து அடுத்த கட்டமாக நீதிமன்றத்துக்கும் செல்வேன் என்றாா் சிந்தாமணி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பள்ளி மாணவா் தாக்கப்பட்ட விவகாரம்: விசாரணை அதிகாரியை மாற்றக் கோரி ஆட்சியரிடம் மனு

டாஸ்மாக் கடையை மூடக் கோரி ஆட்சியரிடம் பெண்கள் மனு அளிப்பு
சுற்றுலாத் துறை அமைச்சரின் தோ்தல் வெற்றி செல்லாது: காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராக தவெக வேட்பாளர் மனு!
திருப்போரூா்: தவெக வேட்பாளா் விஜயராஜ் 39,786 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

