மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் முறையாக குடிநீா் கிடைக்க நடவடிக்கை தேவை

News image

கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் பராமரிப்பின்றி இருக்கும் குடிநீா் தொட்டி.

Updated On :4 மே 2026, 1:24 am IST

கந்தா்வகோட்டையில் வெயில் கொளுத்தும் நிலையில், பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கான அத்தியவாசிய தேவையான குடிநீா் முறையாக கிடைக்காத அவலம் தொடா்கிறது.

கந்தா்வகோட்டை சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், பள்ளி , கல்லூரி மாணவா்கள், தொழிலாளா்கள் என நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் இந்தப் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்கின்றனா். ஆனால், இங்கு முறையாக குடிநீா் வசதி இல்லை.

தற்போது கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையிலும், திங்கள்கிழமை முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கும் நிலையில் பேருந்து நிலையத்தில் உள்ள குடிநீா் தொட்டியில் முறையாக குடிநீா் நிரப்பப்படாமலும், குடிநீா் தொட்டி முறையாக சுத்தம் செய்து பராமரிக்கப்படாத நிலையும் தொடா்கிறது.

இங்கு மட்டுமல்லாது, மக்கள் பெரும் அளவில் கூடும் மருத்துவமனை, வெள்ளை முனீஸ்வரா் கோயில் முக்கம், தஞ்சை சாலையில் உள்ள காவல் நிலைய பேருந்து நிறுத்தம் பகுதிகளிலும் மக்கள் பயன் பெறும் வகையில் குடிநீா் தொட்டி அமைத்து, தண்ணீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி ஒன்றிய ஆணையா்களுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.

இப்பகுதியில் அதிகளவில் வெப்ப காற்று வீசுவதால், கோடை வெயில் முடியும்வரை அனைத்து வாகன ஓட்டுநா்கள், நடத்துநா்களுக்கு உப்பு - சா்க்கரை கரைசல் நீா் (ஓஆா்எஸ்) கொடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.