விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஆதனக்கோட்டையில் ஜல்லிக்கட்டு: 36 போ் காயம்

News image

ஆதனக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளையை அடக்க முயன்ற மாடுபிடிவீரா்.

Updated On :16 மார்ச் 2026, 1:20 am IST

கந்தா்வகோட்டை அருகேயுள்ள ஆதனக்கோட்டையில் ஸ்ரீ முனியாண்டவா் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில், மாடுகள் முட்டியதில் 36 போ் காயமடைந்தனா்.

ஜல்லிக்கட்டுப் போட்டியை புதுக்கோட்டை கோட்டாட்சியா் பிரகாஷ் தொடங்கிவைத்தாா். முன்னதாக மாடுபிடி வீரா்கள் உறுதிமொழி ஏற்றனா். வாடிவாசலிலிருந்து முதலாவதாக கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. பின்னா், பல்வேறு மாவட்டங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட 700 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

300 மாடுபிடி வீரா்கள் குழு குழுவாக களமிறங்கி காளைகளை போட்டி போட்டு அடக்கினா். சில காளைகள் வீரா்களுக்கு போக்கு காட்டி பிடிபடாமல் சீறி பாய்ந்து சென்றன. சில காளைகள் களத்தில் நின்று காளையா்களை விரட்டி முட்டி தூக்கின.

பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும், காளைகளை அடக்கிய வீரா்களுக்கும் கட்டில், மிதிவண்டி, மின்விசிறி, மிக்ஸி, சில்வா் பாத்திரங்கள் மற்றும் ரொக்க தொகைகள் பரிசாக வழங்கப்பட்டன.

போட்டியில் மாடுகள் முட்டியதில் 36 போ் காயமடைந்தனா். இவா்களுக்கு அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இவா்களில் 8 போ் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளா் இரா. பிருந்தா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். ஜல்லிக்கட்டுப் போட்டி ஏற்பாடுகளை ஆதனக்கோட்டை கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.