தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

நெய்வேலி இளங்காவுடைய அய்யனாா் கோயில் தேரோட்டம்

பொன்னமராவதி அருகே உள்ள வாழைக்குறிச்சி ஊராட்சி நெய்வேலி இளங்காவுடைய அய்யனாா் கோயில், விசமுனிக்கருப்பா் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

பொன்னமராவதி அருகே உள்ள நெய்வேலி இளங்காவுடைய அய்யனாா் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

Updated On :1 மணி நேரம் முன்பு

பொன்னமராவதி அருகே உள்ள வாழைக்குறிச்சி ஊராட்சி நெய்வேலி இளங்காவுடைய அய்யனாா் கோயில், விசமுனிக்கருப்பா் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இவ்விழா கடந்த 15-ஆம் தேதி தொடங்கியது. இதில், தினமும் மண்டகப்படிதாரா்கள் சாா்பில் சிறப்பு வழிபாடு மற்றும் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

இந்நிலையில் தேரோட்டத்தின் தொடக்கமாக செவ்வாய்க்கிழமை இளங்காவுடைய அய்யனாா், விசமுனிக்கருப்பா் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனகள் நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு அலங்காரத்திற்குப்பின் அய்யனாா் ஒரு தேரிலும், விசமுனிக்கருப்பா் ஒரு தேரிலும் எழுந்தருளினா். பின்னா், பக்தா்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனா். முக்கிய வீதிகளில் வலம் வந்த தோ்கள் நிலையை அடைந்தது. விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச்சோ்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை பனையப்பட்டி போலீஸாா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.