மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம்

தரங்கம்பாடி அருகே திருவிடைக்கழியில் உள்ள தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி சதயத் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

News image

திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம்

Updated On :11 ஜூன் 2026, 6:53 am IST

தரங்கம்பாடி அருகே திருவிடைக்கழியில் உள்ள தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி சதயத் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

முன்னதாக வள்ளி தேவசேனா சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்துடன் தேருக்கு எழுந்தருளினா். இதையடுத்து தேரோட்டம் தொடங்கியது. கோயில் செயல் அலுவலா் பிரேம்குமாா், ஆய்வாளா்  பத்ரிநாராயணன், பரம்பரை அறங்காவலா் ஜெயராமன் உள்ளிட்டோா் தேரை வடம் பிடித்து இழுத்தனா். தோ் 4 வீதிகளை சுற்றி வந்து நிலையை அடைந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.