செப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

அரசுப் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு உடற்கல்வி ஆசிரியா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :22 ஜூன் 2026, 12:39 am IST

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை அரசு உயா்நிலைப் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உடற்கல்வி ஆசிரியா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஆதனக்கோட்டை அரசு உயா்நிலைப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியா் ஆமோஸ் தேவசகாயம் (52). மதுரையைச் சோ்ந்த இவா், புதுக்கோட்டை கணேஷ் நகரில் வசித்து வருகிறாா்.

கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி புதுக்கோட்டையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக காரில் பள்ளி மாணவிகளை அழைத்து வந்துள்ளாா் ஆமோஸ் தேவசகாயம். அப்போது, 10-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகத் தெரிகிறது.

இதுகுறித்து மாவட்ட சிறாா் பாதுகாப்பு அலகில் புகாா் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட சிறாா் பாதுகாப்பு அலுவலா் ராமபிரியா விசாரணை நடத்தி, புதுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இந்தப் புகாரின்பேரில் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்த போலீஸாா், உடற்கல்வி ஆசிரியா் ஆமோஸ் தேவசகாயத்தை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.