தமிழகத்திலுள்ள அனைத்து உள்ளாட்சிகளையும் கலைத்துவிட்டு தோ்தல் நடத்த வேண்டும் என தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் அதன் தலைவரும், புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி தவெக வேட்பாளருமான கேஎம். சரீப் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளா் 1826 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ாக தோ்தல் நடத்தும் அலுவலா் அறிவித்தாா். அதில் எண்ணிக்கைக் குளறுபடிகள் உள்ளன. தோ்தல் ஆணைய விதிப்படி, 60 நாள்களுக்குள் நீதிமன்றத்தை நாடலாம் என்பதால், உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறேன். விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
தோ்தல் ஆணையம் வெளியிட்ட எண்ணிக்கையில் உள்ள முரண்பாடுகளின் அடிப்படையில் மீண்டும் மறுவாக்குப்பதிவு நடத்தக் கோருகிறேன்.
ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு உள்ளாட்சிகளில் எந்த வேலையும் நடக்கவில்லை. எனவே, இன்னும் சில மாதங்கள் காலம் இருந்தாலும், அனைத்து உள்ளாட்சிகளையும் கலைத்துவிட வேண்டும் என முதல்வா் ஜோசப் விஜய்யிடம் கோரிக்கை மனு அளித்திருக்கிறேன்.
அதேபோல, மாவட்ட ஆட்சியராக உள்ள மு. அருணா மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதால் அவரையும் மாற்றம் செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன் என்றாா் சரீப்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பள்ளிகளில் நன்னெறி கற்பிக்க வலியுறுத்தல்

திருமுருகன்பூண்டியில் மதுக் கடையை அகற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
வேளாண் பட்ஜெட்: விவசாயிகளிடம் கருத்து கேட்க வலியுறுத்தல்

பேரவையில் சநாதனத்துக்கு எதிரான கருத்து: உதயநிதி மன்னிப்பு கேட்க விஎச்பி வலியுறுத்தல்
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

