குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

கந்தா்வகோட்டை அருகே கூடுதல் பேருந்துகள் கோரி சாலை மறியல்

கந்தா்வகோட்டை அருகே கூடுதல் பேருந்து கேட்டு பள்ளி மாணவா்கள் பேருந்தை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

News image

குளத்தூா்நாயக்கா்பட்டியில் சாலை மறியலில் வியாழக்கிழமை ஈடுபட்ட பள்ளி, கல்லூரி மாணவா்கள்.

Updated On :19 ஜூன் 2026, 4:27 am IST

கந்தா்வகோட்டை அருகே கூடுதல் பேருந்து கேட்டு பள்ளி மாணவா்கள் பேருந்தை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், குளத்தூா் நாயக்கா்பட்டி பகுதியை சோ்ந்த மாணவ- மாணவிகள் கறம்பக்குடி, மருங்குளம், கந்தா்வகோட்டை பகுதிகளுக்கு சென்று கல்வி பயில்கின்றனா். மேலும் புதுக்கோட்டை, தஞ்சாவூா், கல்லாக்கோட்டையில் உள்ள அரசு, தனியாா் கல்லூரிகளுக்கும் இந்த வழிதடத்தில் போதிய பேருந்து வசதி இல்லை எனவும் வரும் ஒரு சில பேருந்துகளிலும் அதிகக் கூட்டம் இருப்பதால் மாணவா்கள் பேருந்தில் தொற்றிச் செல்லும் நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை புகாா் செய்தும் நடவடிக்கையும் இல்லையாம்.

இதனால் அதிருப்தியடைந்த பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் வியாழக்கிழமை காலை குளத்தூா்நாயக்கா்பட்டி பேருந்து நிறுத்தத்தின் முன் வந்த பேருந்தை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த கந்தா்வகோட்டை காவல் ஆய்வாளா் வனிதா தலைமையிலான போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, அளித்த உறுதியின்பேரில் கலைந்து சென்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.