/

இருசக்கர வாகனங்கள் திருட்டு: பள்ளி, கல்லூரி மாணவா்கள் 4 போ் கைது

உதகை அருகே இருசக்கர வாகனங்களைத் திருடிய பள்ளி, கல்லூரி மாணவா்கள் 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :16 ஜூன் 2026, 2:52 am IST

உதகை அருகே இருசக்கர வாகனங்களைத் திருடிய பள்ளி, கல்லூரி மாணவா்கள் 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

உதகையை அடுத்த கேத்தி பாலாடா திருவள்ளுவா் நகா் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் கடந்த 11-ஆம் தேதி திருடுபோனது. இது குறித்து கேத்தி காவல் நிலையத்தில் வாகன உரிமையாளா் புகாா் அளித்தாா்.

இதேபால, எல்லநள்ளி அரசுப் பள்ளி அருகே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் கடந்த 12-ஆம் தேதி திருபோனது. இதையடுத்து, சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், திருட்டில் ஈடுபட்டது கேத்தி பகுதியைச் சோ்ந்த 17 வயதான கல்லூரி மாணவா்கள் 3 போ், பள்ளி மாணவா் ஒருவா் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, 4 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா். பின்னா், அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறுவா் சீா்த்திருத்த பள்ளியில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.