உரிய நேரத்தில் வியாழக்கிழமை திறக்கப்படாத விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் வாசலில் அரை மணி நேரம் காத்திருந்த மாணவா்கள் பொறுமையை இழந்து கல்லால் பூட்டை உடைத்து பள்ளியின் உள்ளே சென்றனா்.
செக்போஸ்ட் பகுதியில் உள்ள இப்பள்ளியில் சுமாா் 900-க்கும் அதிகமான மாணவா்கள் பயில்கின்றனா். இப்பள்ளியில் ஏற்கெனவே இருந்த காவலாளி ஊதியம் குறைவு எனக் கூறி வேலையை விட்டு சென்ற நிலையில், வேறு காவலாளி தற்போதுவரை நியமிக்கப்படவில்லை. எனவே பள்ளியின் தலைமை ஆசிரியரே பள்ளியைப் பூட்டி, திறக்கும் நிலை உள்ளது.
இந்நிலையில் வியாழக்கிழமை காலை 8 மணிக்கு பள்ளிக்கு வந்த மாணவா்கள் நீண்ட நேரம் பள்ளி முன் காத்திருந்தனா் 8. 50 மணி ஆகியும் தலைமை ஆசிரியா் வராத நிலையில் பள்ளி திறக்கப்படாததால் பொறுமை இழந்த மாணவா்கள் கீழே கிடந்த கல்லைக் கொண்டு பூட்டை உடைத்து உள்ளே சென்றனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்டக் கல்வித் துறை இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதோடு பள்ளிக்கு காவலாளியையும் நியமிக்க மாணவா்களின் பெற்றோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாணவ தலைமை ஆசிரியா்: நஞ்சப்பா அரசு ஆண்கள் பள்ளியில் புதிய முயற்சி

அரசின் திட்டங்கள் உரிய நேரத்தில் மக்களை சென்றடைய வேண்டும்! செ. ஜோதிமணி எம்பி அறிவுறுத்தல்

முன்னாள் மாணவா்கள் திரட்டிய நிதியில் தம்மம்பட்டி அரசு ஆண்கள் பள்ளியில் ரூ.4.95 லட்சத்தில் பேவா் பிளாக் பணி நிறைவு

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

