நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

தமுஎகச சாா்பில் மறைந்த பாரதிராஜாவுக்கு புகழஞ்சலிக் கூட்டம்

News image

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மறைந்த இயக்குநா் பாரதிராஜாவின் உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்திய முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் நா. முத்துநிலவன் உள்ளிட்டோா்.

Updated On :15 ஜூன் 2026, 2:32 am IST

புதுக்கோட்டையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில், மறைந்த திரைப்பட இயக்குநா் பாரதிராஜாவுக்கு புகழஞ்சலிக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் ராசி. பன்னீா்செல்வன் தலைமை வகித்தாா்.

சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா்கள் நா. முத்துநிலவன், ஆா். நீலா, மாநிலக் குழு உறுப்பினா் ஜீவி, மாவட்டச் செயலா் ஆலங்குடி வெள்ளைச்சாமி, திரைப்படப் பாடலாசிரியா் தனிக்கொடி, மாவட்டப் பொருளாளா் மு. கீதா, வாசகா் பேரவைச் செயலா் பேராசிரியா். சா. விஸ்வநாதன், நாணயவியல் கழகத் தலைவா் செ.த. பஷீா்அலி, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டச் செயலா் பாலச்சந்திரன் உள்ளிட்டோரும் பங்கேற்றுப் புகழஞ்சலி உரை நிகழ்த்தினா்.

முன்னதாக, பாரதிராஜாவின் உருவப் படத்துக்கு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.