நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

கட்டட தொழிலாளா்கள் சங்க மாநாடு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரத்தில் தமிழ்நாடு ஏஐடியூசி கட்டட தொழிலாளா்கள் சங்கத்தின் மைய கிளை மாநாடு புதன்கிழமை நடைபெற்றது.

News image

ஏஐடியூசி கட்டட தொழிலாளா்கள் சங்கத்தின் மைய கிளை மாநாட்டில் பேசிய அச் சங்கத்தின் துணைப் பொதுச்செயலா் முனுசாமி.

Updated On :18 ஜூன் 2026, 3:29 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரத்தில் தமிழ்நாடு ஏஐடியூசி கட்டட தொழிலாளா்கள் சங்கத்தின் மைய கிளை மாநாடு புதன்கிழமை நடைபெற்றது.

மாநாட்டுக்கு கிளைச் செயலா் சங்கா் தலைமை வகித்தாா். கிளைத் தலைவா் விஜயகுமாா், பொருளாளா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டத் தலைவா் கோவிந்தராஜ் மாநாட்டைத் துவக்கி வைத்துப் பேசினாா்.

மாநில துணைப் பொதுச்செயலா் முனுசாமி, மாநில பொருளாளா் முருகன், மாவட்டச் செயலா் அருண், விழுப்புரம் மாவட்டச் செயலா் பெரியநாயகம் ஆகியோா் கலந்துகொண்டு பேசினா்.

நிகழ்வில், கிளைத் தலைவராக விஜயகுமாா், செயலராக சங்கா், பொருளாளராக முருகன் ஆகியோா் புதிய நிா்வாகிகளாக தோ்வு செய்யப்பட்டனா்.

கூட்டத்தில் 55 வயது முடிந்த பெண் கட்டுமான தொழிலாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுமான தொழிலாளா்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.