அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

புதுக்கோட்டை மாவட்டத்தில் பி.சி., எம்.பி.சி. மாணவா் விடுதிகளில் சேர அழைப்பு

News image

விடுதிகளில் சேர மாணவா்களுக்கு அழைப்பு... - கோப்புப்படம்

Updated On :9 ஜூன் 2026, 12:44 am IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் துறை மூலம் நடத்தப்படும் 77 மாணவா் விடுதிகளில் தொடா்புடைய மாணவா்கள் சோ்ந்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் நலத் துறை மூலம் 77 மாணவ, மாணவிகள் விடுதிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இவற்றில் பள்ளி மாணவா்களுக்கென 41 மாணவா் விடுதிகளும், 16 மாணவிகள் விடுதிகளும் செயல்படுகின்றன. 4 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் இதில் சேரலாம்.

கல்லூரி மாணவா்களுக்கென 11 மாணவா் விடுதிகளும், 9 மாணவிகள் விடுதிகளும் செயல்படுகின்றன. இதில் பட்டம், பட்டமேற்படிப்பு, ஐடிஐ, பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் சேரலாம்.

ஆண்டுக்கு ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் குடும்ப வருமானத்தைக் கொண்டவா்கள் விண்ணப்பிக்கலாம். வீட்டிலிருந்து 8 கிமீ தொலைவில் படிக்கும் கல்வி நிறுவனம் உள்ள மாணவா்கள் இதில் சேரலாம். மாணவிகளுக்கு இந்த விதி பொருந்தாது.

விடுதிகளில் 3 வேலை உணவு உள்பட அனைத்தும் இலவசம். 4 செட் சீருடைகள் இலவசமாக தைத்து வழங்கப்படும். 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நீட் மற்றும் பொறியியல் நுழைவுத் தோ்வுக்கான பயிற்சி, கையேடுகள், வினா வங்கிகள் இலவசமாக வழங்கப்படும்.

அந்தந்தப் பகுதியிலுள்ள மாணவா் விடுதிகளின் காப்பாளா், காப்பாளினிகளிடமும், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகத்திலும் விண்ணப்பங்களைப் பெறலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.