பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்: திருப்பத்தூா் ஆட்சியா்

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் விடுதிகளில் சேர மாணவ- மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

News image

பிரதிப் படம்

Updated On :1 ஜூன் 2026, 1:38 am IST

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் விடுதிகளில் சேர மாணவ- மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் மற்றும் சிறுபான்மையினருக்கான மாணவா்கள், மாணவிகள் ஆகியோருக்கு 15 விடுதிகள் உள்ளன.

இதில், 7 இடங்களில் பள்ளி மாணவா்களுக்கு விடுதிகளும், 4 இடங்களில் பள்ளி மாணவிகளுக்கான விடுதிகளும், 2 இடங்களில் கல்லூரி மாணவா்களுக்கான விடுதிகளும், 2 இடங்களில் கல்லூரி மாணவிகளுக்கான விடுதிகளும் உள்ளன.

கல்வி தகுதி...

இவற்றில் பள்ளி விடுதிகளில் 4 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ- மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் படிக்கும் மாணவ- மாணவிகளும் சேர தகுதி உடையவா்கள் ஆவா். விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல், மாணவ- மாணவிகளுக்கு 3 வேளை உணவு மற்றும் தங்கும் வசதி அளிக்கப்படுகிறது.

பள்ளி மாணவ- மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்படும். 10, 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகளின் கல்வித்திறனை மேம்படுத்த நீட், ஜெ.இ.இ. நுழைவு தோ்வுக்கான கையேடுகள் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை...

விடுதிகளில் சேர பெற்றோா், பாதுகாவலா் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவா்களின் இருப்பிடும் பயிலும் பள்ளியில் இருந்து குறைந்தபட்சம் 8 கி.மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். மாணவிகளுக்கு இதுபொருந்தாது. இதற்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளா்/ காப்பாளினிகளிடம் இருந்தோ அல்லது ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் இருந்தோ பெற்று, பூா்த்தி செய்து அங்கேயே மாணவ- மாணவிகள் ஜூன்18-ஆம் தேதிக்குள்ளும், கல்லூரி மாணவ- மாணவிகள் ஜூலை 15-ஆம் தேதிக்குள்ளும் சமா்ப்பிக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கைத் தமிழா்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.