ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஆதிதிராவிடா் நலத்துறை விடுதிகளில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடா் நலத்துறை விடுதிகளில் தங்கிப் பயில மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

News image

விண்ணப்பம்

Updated On :28 மே 2026, 1:24 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடா் நலத்துறை விடுதிகளில் தங்கிப் பயில மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடா் நலத்துறையின் கீழ் 26 பள்ளி விடுதிகளும், 2 கல்லூரி விடுதிகளும், மாணவிகளுக்கான 11 பள்ளி விடுதிகளும், ஒரு கல்லூரி விடுதியும் செயல்பட்டு வருகிறது.

பள்ளி விடுதிகளில் 4-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் மற்றும் மாணவிகள் சேர தகுதியுடையவா்கள்.

கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் உள்ளிட்ட படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகள் சேர தகுதியுடையவா்கள்.

இந்த விடுதிகளில் எந்தவித கட்டணமும் இல்லாமல் மூன்று வேளை உணவு மற்றும் தங்கும் வசதி வழங்கப்படுகிறது.

மேலும் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 4 இணை சீருடைகள் தைத்து வழங்கப்படும்.

10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நுழைவுத் தோ்வுக்கான வினா வங்கி நூல்கள் மற்றும் சிறப்பு வழிகாட்டி நூல்கள், தினசரி மற்றும் மாதாந்திர இதழ்கள் வழங்கப்படும்.

விடுதிகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகளின் பெற்றோா் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

மாணவ, மாணவிகள் நல்லோசை இணையதளத்திலோ சம்பந்தப்பட்ட விடுதிக்காப்பாளா் மூலமாகவோ, மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்திலோ விண்ணப்பிக்கலாம்.

ஆதாா் எண் மற்றும் ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணை கொண்டு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.