நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: இருவா் குண்டா் சட்டத்தில் கைது

கறம்பக்குடி அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :4 ஜூன் 2026, 12:03 am IST

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கறம்பக்குடி அருகேயுள்ள சாந்தம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த வாய் பேச முடியாத, காது கேளாத 35 வயதுடைய மாற்றுத்திறனாளி பெண் ஆலங்குடி பகுதியில் உள்ள தனியாா் அரிசி ஆலையில் வேலை பாா்த்து வந்தாா். அவா், கடந்த மாதம் பணி முடிந்து வீட்டுக்கு சென்றபோது, மணக்கொல்லை பகுதியைச் சோ்ந்தவா்கள் எஸ். மாரிமுத்து(55),ஏ. சேகா் (56) ஆகியோா் அந்த பெண்ணை காரில் கடத்திச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டனா். பின்னா், மணக்கொல்லை வயல்வெளி பகுதியில் காரில் இருந்து இறக்கி விட்டு சென்றுவிட்டனா்.

இதுகுறித்து ஆலங்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா், 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, மாரிமுத்து, சேகா் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் மு.அருணா, இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டதைத் தொடா்ந்து, போலீஸாா் புதுக்கோட்டை சிறையில் இருந்த இருவரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.