நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை: 2 போ் கைது

ஜெயங்கொண்டம் அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இருவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :27 மே 2026, 2:47 am IST

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ஜெயங்கொண்டம் அருகே சம்போடை கிராமத்தைச் சோ்ந்த செளந்தரராஜன் (56) என்பவா், அப்பகுதியில் கடந்த 21-ஆம் தேதி மாடு மேய்த்துக் கொண்டிருந்த 26 வயதுடைய வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணை அண்மையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

மேலும், கடந்த 23-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த இந்தப் பெண்ணை அடித்து துன்புறுத்தி அதே கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ் (46) என்பவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் மீன்சுருட்டி காவல் துறையினா் வழக்குப் பதிந்து, மேற்கண்ட இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும் பாதிக்கப்பட்ட பெண் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.