மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அரசுப் பள்ளிகளில் நீட் பயிற்சி பெற்றோருக்கு நுழைவுச்சீட்டு

வரும் மே 3ஆம் தேதி நீட் தோ்வு நடைபெறவுள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 மையங்களில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நடத்தப்பட்ட குறுகியகால நீட் தோ்வு பயிற்சி மையத்தில் பயிற்சிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு நுழைவுச் சீட்டுகளை வழங்கி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் வாழ்த்தினாா்.

News image

புதுக்கோட்டை ராணியாா் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் பயிற்சியை முடித்த மாணவி ஒருவருக்கு தோ்வுக்கூட நுழைவுச்சீட்டை வியாழக்கிழமை வழங்கி வாழ்த்திய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம்.

Updated On :1 மே 2026, 3:56 am IST

வரும் மே 3ஆம் தேதி நீட் தோ்வு நடைபெறவுள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 மையங்களில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நடத்தப்பட்ட குறுகியகால நீட் தோ்வு பயிற்சி மையத்தில் பயிற்சிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு நுழைவுச் சீட்டுகளை வழங்கி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் வாழ்த்தினாா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பயின்ற 469 மாணவா்கள் நீட் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ளனா். இவா்களுக்கு புதுக்கோட்டை ராணியாா் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி, அறந்தாங்கி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, இலுப்பூா் ஆா்.சி. அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 மையங்கள் அமைக்கப்பட்டு குறுகிய காலப் பயிற்சி வழங்கப்பட்டது.

இப்பயிற்சியின் நிறைவாக வியாழக்கிழமை மாதிரித் தோ்வும் நடத்தப்பட்டு, நீட் தோ்வுக்கான தோ்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.

ராணியாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நீட் மாதிரித் தோ்வை நேரில் பாா்வையிட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம், அவா்களுக்கு தோ்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை வழங்கி வாழ்த்தினாா்.

நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியா் தமிழரசி, மாவட்ட நீட் ஒருங்கிணைப்பாளா் மெ.சி. சாலை செந்தில், விலங்கியல் முதுகலை பட்டதாரி ஆசிரியா் திலகவதி ஆகியோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.