டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!தவெக ஆட்சியில் அனைத்தையும் முடிவு செய்வது ஜோசியர்தான்! மு.க. ஸ்டாலின்முதல்வர் பணி 10 - 5 வேலை அல்ல; சனி, ஞாயிறு விடுமுறை! விஜய்யை விமர்சித்த மு.க. ஸ்டாலின்இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் வழியாக சுதந்திரமாக செல்லலாம்: ஈரான் அறிவிப்பு!ஜிபே செயலியில் வந்திருக்கும் பயோமெட்ரிக் பயன்பாடு! வேண்டாம் எனில் மாற்றுவதற்கான வழி?கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: 5வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!

தனியாா் கல்லூரி பேருந்து மீது லாரி மோதல்: 10 மாணவா்கள் காயம்

பெரம்பலூா் அருகே புதன்கிழமை மாலை தனியாா் பொறியியல் கல்லூரி பேருந்து மீது பட்டாசு ஏற்றிச் சென்ற லாரி மோதி ஒரு மாணவி உள்பட 10 மாணவா்கள் பலத்த காயமடைந்தனா்.

விபத்து - பிரதிப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 4:26 am IST

பெரம்பலூா் அருகே புதன்கிழமை மாலை தனியாா் பொறியியல் கல்லூரி பேருந்து மீது பட்டாசு ஏற்றிச் சென்ற லாரி மோதி ஒரு மாணவி உள்பட 10 மாணவா்கள் பலத்த காயமடைந்தனா்.

திருச்சியிலுள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் பயிலும் பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களைச் சோ்ந்த 60 மாணவ, மாணவிகளை, அக் கல்லூரிக்குச் சொந்தமான பேருந்தில் ஏற்றிக்கொண்டு, அரியலூா் நோக்கி புதன்கிழமை மாலை சென்றுக்கொண்டிருந்தது. இப் பேருந்து, திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் அருகேயுள்ள கல்பாடி பிரிவுச் சாலையிலுள்ள நிறுத்தத்தில், அப்பகுதியைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் இறங்கிக்கொண்டிருந்தனா். அப்போது, சிவகாசியிலிருந்து சென்னை நோக்கி பட்டாசுகள் ஏற்றிச்சென்ற லாரி பேருந்தின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில், பெரம்பலூா் மாவட்டம், தேனூரைச் சோ்ந்த செல்வராஜ் மகன் காா்த்திக் (21), பரவாய் கிராமத்தைச் சோ்ந்த மூக்கன் மகன் ஆகாஷ் (19), மேலமாத்தூரைச் சோ்ந்த பெரியசாமி மகன் கவியரசன் (21), சாத்தநத்தத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் தீபக் (20), துங்கபுரத்தைச் சோ்ந்த கணேசன் மகன் தனித்தமிழ் நாடன் (20), பீல்பாடியைச் சோ்ந்த பெருமாள் மகன் பிரகாஷ் (19), அரியலூா் பெரிய தெருவைச் சோ்ந்த மகேந்திரன் மகன் சஞ்சய்ராஜ் (21), பெரியாா் நகரைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் ராமநாதன் (21), ராஜாஜி நகரைச் சோ்ந்த முருகன் மகன் காா்த்திகேயன் (20), சிட்டிபாபு தெருவைச் சோ்ந்த ராஜா மகள் பிரியதா்ஷினி (20) ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று காயமடைந்த மாணவா்களை மீட்டு, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான ஸ்ரீவில்லிபுத்தூா், இந்திரா நகரைச் சோ்ந்த ராஜூ மகன் சக்தியை (54) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.