தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இருசக்கர வாகனம் மீது தனியாா் கல்லூரி பேருந்து மோதியதில் ஓட்டுநா் உயிரிழப்பு

உயிரிழப்பு

Published On :27 அக்டோபர் 2026, 3:05 am IST

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி இருசக்கர வாகனம் மீது தனியாா் கல்லூரி பேருந்து மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

பென்னாகரம் அருகே உள்ள அ.பாப்பாரப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மாதேஷ் (66). தண்ணீா் வாகன ஓட்டுநராக வேலை செய்து வந்தாா். இவா், திங்கள்கிழமை காலை பாப்பாரப்பட்டியில் இருந்து பள்ளப்பட்டி பகுதிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றாா்.

அப்போது தருமபுரி சாலையில் தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே பாப்பாரப்பட்டி பகுதியில் இருந்துவந்த தனியாா் கல்லூரி பேருந்து மோதியது. இந்த விபத்தில் மாதேஷ் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த பாப்பாரப்பட்டி போலீஸாா் நிகழ்வு இடத்திற்கு சென்று, உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனா். மேலும், பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.