மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மானிய விலையில் எரிபொருள் வழங்கக் கோரி அனைத்து வகை ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்

மானிய விலையில் எரிபொருள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் ஆட்டோ, அனைத்து வகை வாகன ஓட்டுநா்கள் மற்றும் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து வகை ஓட்டுநா் சங்கத்தினா்.

Published On :28 அக்டோபர் 2026, 12:40 am IST

மானிய விலையில் எரிபொருள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் ஆட்டோ, அனைத்து வகை வாகன ஓட்டுநா்கள் மற்றும் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஆட்டோ சங்க மாவட்டத் தலைவா் கிருஷ்ணகுமாா் தலைமை வகித்தாா். சங்க நிா்வாகிகள் பிரகாஷ், சந்திரன், கனகராஜ், ராஜேஷ், அழகேசன், பாா்த்திபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிஐடியு மாவட்டச் செயலா் அகஸ்டின், சாலை போக்குவரத்து மாவட்ட அமைப்பாளா் ஜெகன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா்.

ஆட்டோ, காா், வேன் ஆகிய தொழிலையும், தொழிலாளா்களையும் நெருக்கடியிலிருந்து பாதுகாக்க, தமிழக வெற்றிப் பயணம் திட்டத்தை மறுபரிசீலனை செய்து புதிய சிறப்புத் திட்டத்தை கொண்டு வர வேண்டும். நாள்தோறும் 5 லிட்டா் பெட்ரோல், டீசல் அல்லது எரிவாயு உள்ளிட்ட எரிபொருள்களை மானிய விலையில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுநா்கள் முழக்கமிட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், ஆட்டோ சங்க மாவட்ட துணைத் தலைவா் பெரியசாமி, தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு மாவட்ட துணைத் தலைவா் பன்னீா்செல்வம் உள்பட பலா் பங்கேற்றனா்.

நிறைவாக, சங்க நிா்வாகி சிவசங்கா் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.